சாதித்து காட்டிய பும்ரா: கும்ளே, வக்கார் யூனிஸ் பாராட்டு

1

நியூயார்க்: ''பும்ரா பெயரை கேட்டதும் பாகிஸ்தான் வீரர்கள் பயந்தனர். இவரது 'புல் டாஸ்' பந்தை கூட விளாச தவறினர்,'' என வக்கார் யூனிஸ் தெரிவித்தார்.


நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுன்டி மைதானத்தில் நடந்த 'டி-20' உலக கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி (119), பாகிஸ்தானை (113/7) வீழ்த்தியது. இந்த வெற்றியை அமெரிக்கா உட்பட உலகம் முழுவதும் உள்ள இந்திய ரசிகர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.
@subboxhd@பும்ரா திருப்பம்@@subboxhd@@

இப்போட்டியில் சுலப இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணி, 14 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 80 ரன் எடுத்து வலுவாக இருந்தது. 15வது ஓவரை வீசிய பும்...பும்...பும்ரா முதல் பந்தில், ரிஸ்வானை போல்டாக்கி திருப்புமுனை ஏற்படுத்தினார். இதற்கு பின் ஆட்டம் இந்தியா பக்கம் வந்தது. பும்ரா அசுர 'வேகத்தில்' வீசிய பந்துகளை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் பேட்டர்கள் திணறினர். 4 ஓவரில் 14 ரன் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். இதில் 15 'டாட் பால்' அடங்கும். ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

பாகிஸ்தான் முன்னாள் 'வேகப்புயல்' வக்கார் யூனிஸ் கூறுகையில்,''பும்ரா பந்துவீசும் முறை வித்தியாசமாக உள்ளது. இதை கணித்து ஆடுவது மிகவும் கடினம். எந்த சூழ்நிலையிலும் துல்லியமாக பந்துவீசுகிறார். உலகத் தரம் வாய்ந்த பவுலராக உள்ளார். இவரது 'புல் டாஸ்' பந்துகளை கூட பாகிஸ்தான் வீரர்களால் விளாச முடியவில்லை. இதற்கு இவரது பெயர் ஏற்படுத்திய பயமே காரணம். பேட்டர்களின் மனதில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளார்,''என்றார்.

@subboxhd@19வது ஓவரில்... @@subboxhd@@

இந்திய 'சுழல்' ஜாம்பவான் கும்ளே கூறுகையில்,''இந்திய அணியின் 'நம்பர்-1' பவுலராக திகழ்கிறார் பும்ரா. இவரை சமாளிப்பது எந்த ஒரு பேட்டருக்கும் கடினம். பாகிஸ்தானுக்கு எதிராக, 19வது ஓவரில் இப்திகரை வெளியேற்றிய இவர், 3 ரன் மட்டுமே கொடுத்தார். இந்த ஓவரில் சில பவுண்டரிகள் அடித்திருந்தால், நிலைமை மாறியிருக்கும். இந்திய அணி உலக கோப்பை வெல்ல, பும்ராவின் பங்களிப்பு அவசியம். தொடர்ந்து சிறப்பாக பந்துவீச வேண்டும்,'' என்றார்.
@subboxhd@பவுலிங் 'ஜீனியஸ்'@@subboxhd@@

இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில்,''பும்ரா ஒரு 'ஜீனியஸ்'. பாகிஸ்தானுக்கு எதிராக பந்துவீச்சில் மிரட்டினார். இதே மனநிலையுடன் உலக கோப்பை தொடர் முழுவதும் அசத்த வேண்டும். நியூயார்க்கில் ரசிகர்கள் அமோக ஆதரவு அளித்தனர். இந்தியாவில் விளையாடுவதை போல உணர்ந்தோம்,''என்றார்.

@subboxhd@பாவம் பாபர் @@subboxhd@@

இந்தியா, அமெரிக்காவிடம் தோற்ற பாகிஸ்தான் அணி 'சூப்பர்-8' சுற்றுக்கு முன்னேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அடுத்து கனடா, அயர்லாந்தை பெரிய வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும். மறுபக்கம் அமெரிக்க அணி, அயர்லாந்து அல்லது இந்தியாவுக்கு எதிராக வெற்றி பெறக் கூடாது. கேப்டன் பாபர் ஆசம் கூறுகையில்,''இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக பவுலிங் செய்தோம். பேட்டிங் எடுபடவில்லை. 59 'டாட்' பந்துகள் வினையாக அமைந்தது. தவறுகளை திருத்தி, அடுத்த இரு போட்டிகளில் வெல்வோம்,'' என்றார்.

@subboxhd@விமர்சனம் டூ வாழ்த்து@@subboxhd@@

முதுகு பகுதி 'ஆப்பரேஷன்' காரணமாக 2022ல் ஆஸ்திரேலியாவில் நடந்த உலக கோப்பை தொடரில் பும்ரா பங்கேற்கவில்லை. அடுத்து முகுது பிடிப்பு காரணமாக 10 மாதங்கள் விளையாட முடியவில்லை. இவரால் மீண்டும் களமிறங்க முடியுமா என்ற சந்தேகம் எழுப்பினர். காயத்தில் இருந்து மீண்ட பும்ரா, கடந்த ஒரு ஆண்டில் மூன்றுவித கிரிக்கெட்டிலும் சேர்த்து 67 விக்கெட் வீழ்த்தினார். தற்போது பாகிஸ்தானுக்கு எதிராகவும் அசத்தியுள்ளார்.
இவர் கூறுகையில்,''ஒரு ஆண்டுக்கு முன் எனது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டதாக விமர்சித்தனர். இப்போது சிறப்பாக பந்துவீசுவதாக புகழ்கின்றனர். எனது ஆட்டத்தில் மட்டும் கவனம் செலுத்துகிறேன். ஆடுகளத்திற்கு ஏற்ப பந்துவீசுகிறேன். குறைந்த இலக்கு கொண்ட போட்டிகளில் 'மேஜிக்' பந்துவீச்சை எதிர்பார்க்க முடியாது. பாகிஸ்தானுக்கு எதிராக துல்லியமாக பந்துவீசி நெருக்கடி கொடுத்தேன்,'' என்றார்.

@subboxhd@ரவி சாஸ்திரி உருக்கம்@@subboxhd@@

பாகிஸ்தானுக்கு எதிராக 42 ரன் விளாசிய இந்தியாவின் ரிஷாப் பன்ட், வெற்றிக்கு கைகொடுத்தார். இது குறித்து இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறுகையில்,''கார் விபத்தில் ரிஷாப் காயமடைந்த செய்தியை படித்த போது கண்கள் குளமாகின. ஆஸ்பத்திரிக்கு சென்று பார்த்த போது இன்னும் அதிகமாக வருத்தப்பட்டடேன். இதிலிருந்து மீண்டு அசத்தியுள்ளார். இவரது வாழ்க்கை பயணம், லட்சக்கணக்கான மக்களுக்கு ஊக்கம் அளிக்கும். இந்தியா-பாகிஸ்தான் போட்டி வழக்கமான பரபரப்புடன் முடிந்தது,''என்றார்.

@subboxhd@பாக்., பிரபலங்கள் புகார்@@subboxhd@@

சலீம் மாலிக்: பந்துகளை வீணடித்தார் இமாத் வாசிம். 15 பந்தில் 23 ரன் எடுத்தததால், 'சேஸ்' செய்வது கடினமானது.
அப்ரிதி: பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் உடன் சில வீரர்களுக்கு பிரச்னை உள்ளது. கேப்டன் என்பவர் அணியை ஒருங்கிணைக்க வேண்டும். உலக கோப்பை தொடர் முடிந்ததும் அனைத்து விஷயங்களையும் சொல்வேன்.

அக்தர்: பாகிஸ்தான் வீரர்களின் ஆட்டம் ஏமாற்றம் அளித்தது. தேசமே சோகத்தில் உள்ளது.

மொசின் நக்வி (பாக்., கிரிக்கெட் போர்டு தலைவர்): பாகிஸ்தான் அணிக்கு 'மைனர் சர்ஜரி' போதும் என நினைத்தேன். தற்போது 'மேஜர் சர்ஜரி' தேவைப்படுகிறது. புதிய வீரர்களை கண்டறிய வேண்டும்.