திருவள்ளூர் தொகுதி ஓட்டு எண்ணும் மையத்தில் ஆய்வு
திருவள்ளூர்: திருவள்ளூர் லோக்சபா தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் வரும், ஜூன் 4ல் எண்ணப்பட உள்ளது. பெருமாள்பட்டு தனியார் பள்ளியில், ஓட்டுக்கள் எண்ணப்படுவற்காக நடைபெற்று வரும் பணியை மாவட்ட தேர்தல் அலுவலர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திருவள்ளூர் லோக்சபா தொகுதியில் பதிவான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் பெருமாள்பட்டு தனியார் பள்ளியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது. வரும், ஜூன் 4ல் ஓட்டுக்கள் எண்ணப்படுகின்றன.
ஓட்டு எண்ணப்பட உள்ள மையத்தில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் பிரபுசங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட 'ஸ்ட்ராங் ரூம்', மையத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையிடம் கேட்டறிந்தார்.
பின், திருவள்ளூர் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, ஆறு சட்டசபை தொகுதிகளின் பதிவான ஓட்டு எண்ணப்படும் அறை, அங்கு ஏற்படுத்தப்பட்ட வேட்பாளர், முகவர் மற்றும் ஓட்டு எண்ணும் அலுவலர்கள் செல்வதற்காக அமைக்கப்பட்டு வரும், வாயிலையும் பார்வையிட்டார்.
சட்டசபை வாரியாக ஓட்டு எண்ணும் மையத்தில், ஓட்டுகள் எண்ணுவதற்காக 14 மேஜை அமைக்கப்பட்டு வருகிறது.
கலெக்டர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஜூன் 4ல், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வேட்பாளர், முகவர், பொது தேர்தல் பார்வையாளர், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகியோர் முன்னிலையில் திறக்கப்படும். காலை 8:00 மணிக்கு தபால் ஓட்டுக்களும், அரை மணி நேரம் கழித்து, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டு எண்ணிக்கையும் ஆரம்பிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து