Advertisement

தே.ஜ., கூட்டணியின் பார்லி., குழு தலைவராக பிரதமர் மோடி தேர்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: டில்லியில் பழைய பார்லிமென்ட் வளாகத்தில் நடந்த தே.ஜ., கூட்டணி எம்.பி.,க்களின் ஆலோசனை கூட்டத்தில் அக்கூட்டணியின் பார்லிமென்ட் குழு தலைவராக பிரதமர் மோடி தேர்வு செய்யப்பட்டார்.



லோக்சபா தேர்தலில் 294 இடங்களை பிடித்த தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது. இக்கூட்டணிக்கு சில சுயேச்சைகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.





இந்நிலையில், பழைய பார்லிமென்ட் வளாகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி எம்.பி.,க்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதீஷ்குமார், பாஜ., தலைவர் நட்டா, லோக்ஜனசக்தி கட்சி தலைவர் சிராக் பஸ்வான், மஹாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர்கள் அஜித்பவார், பட்னாவிஸ், பா.ஜ., மாநில முதல்வர்கள், மாநில பாஜ., முதல்வர்கள், ம.பி., முன்னாள் முதல்வர் சிவராஜ் சவுகான் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பங்கேற்க மோடி வந்த போது அனைவரும் எழுந்து நின்று ‛ மோடி.. மோடி...' கோஷம் போட்டனர். பிறகு , அங்கு வைக்கப்பட்டு இருந்த அரசியல்சாசன புத்தகத்தை கையில் ஏந்திய மோடி, தொடர்ந்து அதனை அங்கு வைத்துவிட்டு தலைவணங்கினார்.

தேர்வு



இந்த கூட்டத்தில் தேஜ., கூட்டணியின் பார்லிமென்ட் குழு தலைவராக பிரதமர் மோடி தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி உள்ளிட்டோர் ஜனாதிபதியை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவார்.





வரலாற்று சாதனை

இந்தக் கூட்டத்தில் பா.ஜ., தலைவர் ஜேபி நட்டா பேசியதாவது: தேஜ கூட்டணி உட்பட அனைத்து தலைவரின் சார்பிலும் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டின் சேவைக்காக பிரதமர் மோடி தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்.



ஒடிசாவில் முதன்முறையாகவும், அருணாச்சல பிரதேசத்தில் 3வது முறையாகவும் பா.ஜ., ஆட்சி அமைக்கிறது. 3வது முறை வெற்றி பெறுவது வரலாற்று சாதனை. யாரும் நினைத்துக்கூட பார்க்க முடியாத வளர்ச்சியை இந்தியா பார்த்து உள்ளது. அனைவருக்கும், அனைவருக்குமான வளர்ச்சி என்ற உயரிய நோக்கத்துடன் பாஜ., கூட்டணி அரசு எப்போதும் செயல்படும். இவ்வாறு அவர் பேசினார்







நிர்பந்தம் அல்ல

பிறகு, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: 18 வது லோக்சபாவுக்கு தேர்வு செய்யப்பட்ட எம்பி.,க்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். இந்தியாவின் வளர்ச்சிக்கு மோடியின் உழைப்பே காரணம். தேஜ கூட்டணி கட்சிகள் ஒரே குடும்பமாக இருந்து ஆட்சியையும் , நாட்டையும் வழிநடத்தும். பா.ஜ., கூட்டணி அரசு மீண்டும் அமைவது என்பது நிர்பந்தம் அல்ல. தேசத்திற்கான கடமையாகும். இந்தக்கூட்டணி நிபந்தனையில் உருவானது அல்ல.



பாஜ அரசு அமையும் விவகாரத்தில் எந்த நிர்பந்தமும் இல்லை. தேஜ கூட்டணி அரசுக்கு எந்த அழுத்தமும் கிடையாது. 1962க்கு பிறகு தொடர்ந்து 3வது முறையாக ஆட்சி அமைக்கும் வாய்ப்பு தேஜ கூட்டணிக்கு கிடைத்துள்ளது. பா.ஜ., கூட்டணியின் பார்லி குழு தலைவராக மீண்டும் மோடியை முன்மொழிகிறோம். இவ்வாறு அவர் பேசினார். அப்போது கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் எழுந்து நின்று மோடி, மோடி என கோஷம் போட்டனர்.





மக்களின் ஆசி

பிறகு, பிரதமராக மோடியை பிரதமராக்க வேண்டும் என ராஜ்நாத் முன்மொழிந்ததை, வழிமொழிந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: காஷ்மீர் முதல் குமரி வரை மக்களின் ஆசியுடன் மோடி மீண்டும் பிரதமர் ஆக பதவியேற்க உள்ளார். மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப மோடி மீண்டும் பிரதமர் ஆகிறார். இவ்வாறு அவர் பேசினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்