“ பிரதமர் மோடி மிகப் பெரிய பொறுப்பில் இருந்துவிட்டு அனைத்து கூட்டங்களிலும் மிக மலிவான பிரிவினைவாத அரசியலை செய்து வருகிறார். சாதி, மதம், உணவு என எப்படியெல்லாம் மக்களை பிளவுபடுத்தலாம் என மோடி சிந்திக்கிறார். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என அவர் சிந்தித்திருந்தால் நாடு இந்த நிலைமைக்கு வந்திருக்குமா. மோடியின் ஆட்சியில் போராட்டமே வாழ்க்கையாக மாறிவிட்டது. தனி மனிதர்கள் துவங்கி மாநிலங்கள் வரையில் அடிப்படை உரிமைகளுக்காக போராட வைத்துவிட்டார்.
- ஸ்டாலின், தமிழக முதல்வர்
“ தேச பக்தியும் நேர்மையும் கொண்ட காமராஜரை பின்பற்றி பா.ஜ இன்று நேர்மையான அரசியலை முன்னெடுத்து செல்கிறது. காங்கிரசும் தி.மு.க.,வும் காமராஜரை தொடர்ந்து அவமதித்து வந்திருக்கிறது. எங்கள் லட்சியம் தூய்மையான அரசியல். எம்.ஜி.ஆரின் கனவுகளை தமிழகத்தில் பா.ஜ., முன்னெடுத்துச் செல்கிறது. அவரின் பாரம்பரியத்தை தி.மு.க., தொடர்ந்து அவமதிக்கிறது. ஜெயலலிதாவை தி.மு.க., நடத்திய விதம், சட்டசபையில் அவர் அவமதிக்கப்பட்ட விதத்தை மறக்க முடியாது.
- நரேந்திர மோடி, பிரதமர்
“ பா.ஜ., தேர்தல் அறிக்கையில் கூறிய பொது சிவில் சட்டம், ஒரே நாடு; ஒரே தேர்தல் ஆகிய இரண்டும் பேராபத்து கொண்டவை. பல்வேறு பழக்கம், கலாசாரம், மதம் கொண்ட இந்தியாவில் எப்படி எல்லோருக்கும் பொதுவான சட்டத்தை உருவாக்க முடியும். நாங்கள் பார்லிமென்டில் பொது சிவில் சட்டத்தை நிறைவேற்ற விடமாட்டோம்.
- ப.சிதம்பரம், முன்னாள் நிதி அமைச்சர்
“ தெய்வத்தின் அருளாசியுடன் இருக்கும் கட்சி, அ.தி.மு.க., இதை யார் அழிக்க நினைத்தாலும் அவர்கள் காற்றோடு காற்றாக கரைந்து போவார்கள். எத்தனை பேர் இந்தக் கட்சியை எதிர்த்து பார்த்தார்கள். அவர்கள் இருக்கும் இடமே தெரியவில்லை. அ.தி.மு.க.,விடம் பூச்சாண்டி காட்டுவதை நிறுத்திவிடுங்கள். தொண்டர்களின உழைப்பை நம்பி உள்ள கட்சி இது.
- பழனிசாமி, அ.தி.மு.க., பொதுச்செயலர்
“ நாட்டில் உள்ள அனைத்து மொழிகளும் கலாசாரமும் புனிதமானது என கருதுகிறோம், ஆனால், ஒரே நாடு என்பதில் பா.ஜ.,வினர் உறுதியாக உள்ளனர். நாட்டில் இன்று 83 சதவீத இளைஞர்கள் வேலையில்லா திண்டாட்டத்தை சந்திக்கின்றனர். இந்தியாவை பிரிட்டிஷ் ஆட்சி செய்ததை விட சமச்சீர் அற்றதாக தற்போதைய நிலை இருக்கிறது.
- ராகுல், காங்கிரஸ் எம்.பி.,
“ மோடியின் உத்தரவாதம் என்பது 2024க்குப் பிறகு கோபாலபுரத்தின் ஊழல் குடும்பம் உள்ளே போகும். தி.மு.க.,வின் சமூக வலைதள பிரசாரத்துக்காக 7 கோடியே 39 லட்ச ரூபாயை செலவிட்டுள்ளனர். இந்தக் கம்பெனியின் உரிமையாளராக சபரீசன் இருக்கிறார். ஆட்சியில் கொள்ளையடிக்கும் பணத்தை மீண்டும் மீண்டும் வந்து கொட்டுகின்றனர். மோடியின் உத்தரவாதம் என்பது தமிழகத்தில் குடும்ப ஆட்சியை ஒழிப்போம் என்பது தான்.
- அண்ணாமலை, தலைவர், தமிழக பா.ஜ.,
“ பிரதமர் மோடி அடிக்கடி தமிழகம் வந்துவிட்டு போகிறார். அதனால் என்ன பயன். மக்களுக்கான திட்டங்களைக் கொடுத்தால் உபயோகமாக இருக்கும். விமானத்தில் இறங்கி சாலையில் பயணம் செல்கிறார். இப்படி இருந்தால் மக்கள் ஓட்டு போட்டுவிடுவார்கள. இந்த ஏமாற்று வேலை தமிழகத்தில் எடுபடாது.
- பழனிசாமி, அ.தி.மு.க., பொதுச்செயலர்
“ கடந்த 2 நாட்களுக்கு முன்பு 4 கோடி ரூபாய் பணத்தைப் பறிமுதல் செய்துள்ளனர். இதுவே எதிர்க்கட்சிகள், மாநில கட்சிகளின் வேட்பாளர்களிடம் இருந்து எடுத்திருந்தால் சி.பி.ஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகியவை வரிந்து கட்டிக் கொண்டு வந்திருக்கும். இந்த விவகாரத்தில் மோடியும் நிர்மலா சீதாராமனும் மௌனமாக இருப்பது ஏன்?
- செல்வப்பெருந்தகை, தமிழக காங்., தலைவர்
“ பட்டதாரிகள் மத்தியில் 42 சதவீதம் பேருக்கு வேலையில்லை. ஐ.ஐ.டி.,யில் பட்டம் பெற்ற மாணவர்களில் 30 சதவீதம் பேருக்கு வேலையில்லை என சமீபத்திய அறிக்கை ஒன்று வந்தது. இப்படியொரு சூழலில் கல்விக்கடனை செலுத்த வேண்டும் எனக் கூறினால், அந்த மாணவரால் எப்படி கட்ட முடியும். கடனைக் கட்டாததால் அண்டா, குண்டாவை எல்லாம் ஜப்தி செய்கிறார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தவணை தவறிய அசல், வட்டியை ரத்து செய்வோம் என்கிறோம்.
- ப.சிதம்பரம், முன்னாள் நிதி அமைச்சர்
“ நாம் ஓட்டலுக்கு சாப்பிடச் சென்றால், முதலில் பசியைத் தூண்டும் உணவுகளை கொடுப்பார்கள். நான் இதுவரை கொடுத்தது பசியை தூண்டும் உணவுகள் தான். வரும் ஆண்டுகளில் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும். நிச்சயமாக செய்வோம். பிற கட்சிகளைப் போல வெறும் தேர்தல் அறிக்கைகளை பா.ஜ வெளியிடுவதில்லை. நாங்கள் மக்களுக்கு உறுதிமொழி பத்திரம் கொடுத்து வருகிறோம்.
- பிரதமர் மோடி
“ பா.ஜ., யாரை தழுவினாலும் அவர்கள் பஸ்பம் ஆகிவிடுவார்கள். அந்த விளைவு தான் அ.தி.மு.க.,வுக்கு காத்திருக்கிறது. ஏற்கனவே, அந்தக் கட்சி 2,3 கூறுகளாக மாறியிருக்கிறது. தேர்தல் முடிந்தவுடன் இன்னும் மோசமாக மாறிவிடும். அனைத்துக் கட்சிகளையும் அழித்துவிட வேண்டும் என்பதே பா.ஜ.,வின் முக்கிய நோக்கம்.
- ப.சிதம்பரம், முன்னாள் நிதி அமைச்சர்
“ தேர்தல் பத்திரம் என்ற பெயரில் அதிகாரபூர்வமாக பணத்தைப் பறிக்கும் வழியை ஏற்படுத்தினார்கள். மற்றவர்கள் எல்லாம் வாங்கவில்லையா என்றால் அவை எல்லாம் பொறுக்கிய பழங்கள். 'சுட்ட பழம் வேணுமா?' என மரத்தில் அமர்ந்து கேட்கிறார்கள். சில கம்பெனிகள் தங்களின் வருவாயைவிட அதிக பணத்தைக் கொடுத்திருக்கிறார்கள். அவை எல்லாம் கருப்பு பணம்.
- கமல்ஹாசன், தலைவர், மக்கள் நீதி மய்யம்
“ அ.தி.மு.க., ஆட்சியில் சிறுபான்மை மக்களின் முதுகில் குத்தியவர் பழனிசாமி, இப்போது பா.ஜ.., வுடன் கள்ளக் கூட்டணி வைத்துக் கொண்டு புதிதாக அக்கறை வந்தது போல நடிக்கிறார். அ.தி.மு.க.,வும் பா.ம.க.,வும் ஆதரித்ததால் தான் நாட்டில் சி.ஏ.ஏ., நடைமுறைக்கு வந்துள்ளது. இவ்வளவு துரோகத்தை செய்துவிட்டு, 'இப்போது எதிர்க்கிறோம்' எனச் சொல்வது பசப்பு நாடகம்.
- முதல்வர் ஸ்டாலின்
“ நான் மோடியை எதிர்க்கவில்லை என ஸ்டாலின் சொல்கிறார். நாங்கள் ஆட்சியில் இருந்தால் தானே எதிர்க்க முடியும். நான் முதல்வராக இருந்திருந்தால் தமிழகத்துக்கு எதிராக உள்ள அனைத்து திட்டத்தையும் எதிர்த்து இருப்பேன்.
- பழனிசாமி, அ.தி.மு.க., பொதுச்செயலர்
“ 400 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என பா.ஜ., கூறி வருகிறது. முதலில் 200 தொகுதிகளில் வெற்று பெறுமாறு அக்கட்சிக்கு சவால் விடுகிறேன்.2021 மாநில சட்டப் பேரவை தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என பா.ஜ., கூறியது. ஆனால், 77 தொகுகளில் மட்டுமே அவர்கள் வெற்றி பெற்றனர். அந்த 77 எம்.எல்.ஏ.,க்களில் சிலர் திரிணமூல் காங்கிரஸில் இணைந்துள்ளனர்.
- மம்தா பானர்ஜி, மேற்குவங்க முதல்வர்
“ தேசியக் கட்சியான காங்கிரஸை அழித்து விட்டால், மாநிலக் கட்சிகளை ஒழித்துவிடலாம் என பா.ஜ., ஆர்.எஸ்.எஸ் , ஆகியவை கருதுகின்றன. ஒரே நாடு; ஒரே தேர்தல்; ஒரே கட்சி, ஒரே தலைவர் என்பதே பா.ஜ.,வின் குறிக்கோள். அதுவும் மோடி மட்டும் தான். அவர்தான் வாழ்நாள் முழுவதும் தலைவராக இருக்க வேண்டும் என்பதே பா.ஜ.,வின் நோக்கம்.
- ப.சிதம்பரம், முன்னாள் நிதி அமைச்சர்
“ பிரதமர் மோடி மாநிலங்களை அழிக்க துடியாய் துடிக்கிறார். மாநிலங்களுக்கு எந்த அதிகாரமும் இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில் சர்வாதிகாரி போல செயல்படுகிறார். நீங்கள் எஜமானர்கள் அல்ல, மக்கள் தான் உங்களுக்கு எஜமானர்கள்.
- முதல்வர் ஸ்டாலின்
“ நான் 'கவர்னரை எதிர்த்துப் பேசவில்லை' என ஸ்டாலின் சொல்கிறார். எங்கள் மீது குற்றம் சுமத்தி கவர்னருக்கு மனு கொடுத்தவர் தான் ஸ்டாலின். அப்போதெல்லாம் கவர்னர் நல்லவராக தெரிந்தார். துறைவாரியாக தி.மு.க., செய்த ஊழல்களை பட்டியலிட்டு கவர்னரிடம் புகார் கொடுத்தோம். இதன்பேரில் கவர்னர் நடவடிக்கை எடுத்திருந்தால் லோக்சபா தேர்தலோடு சட்டசபை தேர்தலும் வந்திருக்கும்.
- பழனிசாமி, அ.தி.மு.க., பொதுச்செயலர்
“ பா.ஜ.,வின் கொள்கைகள் வேறு. எங்களின் கொள்கைகள் வேறு. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்க காரணம், 55 ஆண்டுகாலம் தமிழகத்தை ஆண்ட இரு கட்சிகளும் சுரண்டி நாசப்படுத்திவிட்டன. இதற்கு ஒரு மாற்றம் வரவேண்டும் என்ற அடிப்படையில் மக்கள் நலன் கருதியே இந்த முடிவை எடுத்தோம்.
- அன்புமணி ராமதாஸ், பா.ம.க., தலைவர்
“ மத்தியிலும் மாநிலத்திலும் கொள்ளையடிக்க வேண்டும் என்பதே தி.மு.க.,வின் திட்டம். மக்களுக்கு தேவையான நிதிகளை பெற்று தரவும், சிறுபான்மை இன மக்களை பாதுகாக்கவும், சுதந்திரமாக செயல்படவும் பா.ஜ., கூட்டணியில் இருந்து விலகி தேர்தலை சந்திக்கிறோம். ஸ்டாலினுக்கு பதவி பெரிது. எங்களுக்கு மக்கள் பெரிது.
- பழனிசாமி, அ.தி.மு.க., பொதுச்செயலர்
“ தமிழர்கள் மேல் ஏன் இத்தனை கோபம், வெறுப்பு, வன்மம்? மக்களிடையே வெறுப்பை விதைத்து, பிளவுகளை உண்டாக்கி, அதில் குளிர்காய நினைக்கும் பாஜகவின் எண்ணங்கள் ஒருபோதும் பலிக்காது. பாஜகவுக்கு வாக்களிப்பது அவமானம் என்று எடுத்துச் சொல்ல வேண்டும்.பாஜகவுக்கு வாக்களிப்பது எதிர்கால சந்ததிக்கு செய்யும் துரோகம் என்பதை மக்களுக்கு புரிய வைக்க வேண்டும்.
- முதல்வர் ஸ்டாலின்
“ லோக்சபா தேர்தலில் மூன்று பிரதான கட்சிகள் போட்டியிடுகின்றன. போட்டி என வரும் போது தி.மு.க.,- அ.தி.மு.க., மட்டும் என்பதை மக்கள் அறிவார்கள். கடந்த 3 நாட்களாக பிரதமரை ஸ்டாலின் விமர்சிக்கிறார். அடுத்து, என்னை விமர்சிக்கிறார். இதைத் தவிர அவரிடம் வேறு சரக்கு இல்லை. ஒரு பொம்மை முதல்வரிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?
- பழனிசாமி, அ.தி.மு.க., பொதுச்செயலர்
“ அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை அழிக்க பா.ஜ., அரசு முயற்சிக்கிறது. தி.மு.க.,வைப் பற்றி பல்வேறு மாநிலங்களில் விமர்சனம் செய்த பிரதமர் மோடி, தற்போது தமிழகத்துக்கே வந்து விமர்சனம் செய்யத் தொடங்கியுள்ளார். தி.மு.க.,வை பொறுத்தவரை ஏச்சு, ஏளனம், வசவுகளை உரமாக்கிக் கொள்வோம்.
- முதல்வர் ஸ்டாலின்
“ ராஜ்பவனில் பொன்முடி பதவிப் பிரமாணத்தை முடித்த பிறகு, கவர்னரிடம் பூங்கொத்தைக் கொடுத்துவிட்டு, 'தேர்தல் பிரசாரத்தை முதன்முதலாக ராஜ்பவனிலிருந்து தொடங்குகிறேன்' என்று கூறினேன். அவர் உடனே, ”BEST OF LUCK” என்றார்.
- கவர்னர் சொன்ன பெஸ்ட் ஆப் லக்
“ விசாரணை அமைப்புகளை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது, கட்சிகளை உடைப்பது, நிறுவனங்களிடமிருந்து நிதி ஆதாயம் பெறுவது, முக்கிய எதிர்க்கட்சியின் வங்கிக் கணக்கை முடக்குவது போன்றவை போதாதென்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர்களை கைது செய்கின்றனர். இதற்கு இண்டியா கூட்டணி பதிலடி கொடுக்கும்.
- ராகுல்காந்தி, காங்கிரஸ் எம்.பி.,
“ விசாரணை அமைப்புகளை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது, கட்சிகளை உடைப்பது, நிறுவனங்களிடமிருந்து நிதி ஆதாயம் பெறுவது, முக்கிய எதிர்க்கட்சியின் வங்கிக் கணக்கை முடக்குவது போன்றவை போதாதென்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர்களை கைது செய்வதையும் வழக்கத்துக்குள் கொண்டு வருகிறார்கள். இதற்கு இண்டியா தக்க பதிலடி கொடுக்கும்.
- ராகுல் காந்தி, காங்., எம்.பி.,
“ தேர்தல் பத்திரங்கள் ஒழிப்பால் மீண்டும் கருப்புப் பணம் அதிகரிக்கும் அபாயம் உள்ளது என்பதே என் தனிப்பட்ட கருத்து. எனவே தான் தேர்தல் நன்கொடை பத்திரங்களை காங்கிரஸ் எதிர்க்கிறது. அமலாக்கத் துறை நடத்திவரும் சோதனைகளில் 5 சதவீதம் மட்டுமே அரசியல்வாதிகளுக்கு எதிராக உள்ளது. இப்படி இருக்கும்போது எதிர்க்கட்சிகளை அமலாக்கத் துறை வாயிலாக குறிவைப்பதாகக் கூறுவதை ஏற்க முடியாது
- அமித்ஷா, மத்திய உள்துறை அமைச்சர்
“ தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி வரும் லோக்சபா தேர்தலை முன்னிட்டு, 'மோடியின் உத்தரவாதங்கள்' என்ற கோஷத்தை எழுப்பி வருகிறார். கடந்த 2004-ம் ஆண்டில் இந்தியா ஒளிர்கிறது' கோஷத்துக்கு என்னகதி ஏற்பட்டதோ, அதே கதி தற்போதைய மோடியின் உத்தரவாதங்கள் கோஷத்துக்கும் ஏற்படும்.
- காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே
“ நாட்டில் உள்ள ஒவ்வொரு தாயும், மகளும் சக்தியின் வடிவம். நாம் அனைவரும் சக்தியை ஆராதிக்கிறோம், போற்றுகிறோம். ஆனால், சிலர் சக்தியை நிர்மூலமாக்குவோம் என பேசியுள்ளனர். இந்த சவாலை நான் ஏற்கிறேன். நம் தாய், பெண் பிள்ளைகளை இவர்களிடமிருந்து காப்பாற்றிக் கொள்ள உயிர்த் தியாகம் செய்யவும் நான் தயார்.
- பிரதமர் மோடி
“ ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் போது, சம்பந்தப்பட்டவர்களுக்கு வயிற்று வலி ஏற்படுவது இயல்புதான். அதனால்தான் மோடிக்கு எதிராக அவர்கள் அவதூறுகளைப் பரப்பிவருகின்றனர். இந்த நாட்டு மக்களும் எதிர்க்கட்சித் தலைவர்களின் கொள்கைகள், உள்நோக்கம், நேர்மை போன்வற்றைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதனால் அவர்களை மக்கள் புறக்கணித்து விட்டனர்.
- பிரதமர் மோடி
“ வெறுப்புணர்வு, கொள்ளை, வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு மற்றும் அட்டூழியங்களுக்கு எதிராக இந்திய மக்களாகிய நாம் ஒன்றிணைந்து போராடுவோம். நடக்க உள்ள லோக்சபா தேர்தல் மக்களாட்சியையும், சர்வாதிகாரத்திடம் இருந்து அரசமைப்புச் சட்டத்தையும் காப்பாற்றுவதற்கான கடைசி வாய்ப்பு
- காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே
“ தி.மு.க., தமிழகத்தின் பண்பாட்டுக்கு எதிரி. நம் கடந்தகால பாரம்பரியத்தையும் பெருமைகளையும் கண்மூடித்தனமாக எதிர்க்கிறது. அயோத்தி ராமர் கோயில் செல்வதற்கு முன்பு நான் தமிழகம் வந்து சென்றேன். ஆனால், இங்கே அயோத்தி கோயில் விழாவை பார்க்க கூட அவர்கள் தடை செய்தார்கள். உச்ச நீதிமன்றமே அவர்களை கண்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
- பிரதமர் நரேந்திர மோடி
“ முதலில் குடியுரிமை சட்டத்தை படியுங்கள். அதில் பிளவுப்படுத்தவே இல்லை. ஒரு நாட்டில் இருந்து சிறுபான்மையினர் வரும்போது அங்கீகாரம் தரப்படுகிறது. சிறுபான்மையினர் பாதுகாப்பாக இருக்கப் போகிறார்கள். முஸ்லிம் பெரியோர்கள் வரவேற்றுள்ளனர். அநாவசியமாக எதிர்க்காதீர்கள் என்று காஷ்மீரை சேர்ந்தோர் சொல்கிறார்கள். இது பிரிக்கும் திட்டமல்ல, ஒருங்கிணைக்கும் திட்டம். புதிய, பழைய அரசியல்வாதிகள் தெரியாமல் பேசுகிறார்கள்.
- கவர்னர் தமிழிசை
“ சிஏஏ குறித்து கடந்த 4 ஆண்டுகளில் 41 முறை பல்வேறு தரப்பினரிடையே பேசியுள்ளேன். இந்த சட்டத்தால் சிறுபான்மையினரின் உரிமை பறிக்கப்படாது என்று உறுதி அளித்துள்ளேன். இதனை அமல்படுத்த மாட்டோம் எனக் கூற மாநில அரசுகளுக்கு உரிமை இல்லை. அரசியல் ஆதாயத்துக்காக சிலர் தவறான கருத்துகளை பரப்பி வருகின்றனர்.
- மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா
“ அரசமைப்புச் சட்டத்தை மாற்ற பா.ஜ., துடிக்கிறது. அரசமைப்புச் சட்டத்தை எதிர்த்து பேசுவோர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், அதற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என்று பா.ஜ., கூறுகிறது. அதுபோன்ற கருத்துகளைக் கூறுவதற்கு தூண்டுவதே பா.ஜ., தான். இதற்கு முடிவுகட்ட, லோக்சபா தேர்தலில் காங்கிரசுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.
- காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே
“ இனி வரும் காலங்களில் எந்த தேர்தல் வந்தாலும் தி.மு.க., வெற்றி பெறும் என்ற நம்பிக்கை வந்துள்ளது. மக்களுக்கான திட்டங்களை சிந்தித்து செயல்படுத்துவதால் தமிழகத்தின் தொழில் வளம் உயர்கிறது; வேலைவாய்ப்பு அதிகரிக்கிறது. ஒட்டுமொத்தமாக நாம் வளர்வதால் சிலருக்கு பொறாமை ஏற்பட்டுள்ளது.
- முதல்வர் ஸ்டாலின்
“ குடும்ப நலன் குறித்து மட்டுமே கவலைப்படும் அரசியல் தலைவர்களால் பெண்களின் கஷ்டங்களை புரிந்து கொள்ள முடியாது. பெண்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்து அவர்களின் நிலையை உயர்த்தும் சமூகம் மட்டுமே முன்னேறிசெல்லும். 3வது முறையாக அமையும் பா.ஜ., ஆட்சி, பெண்கள் சக்தியின் எழுச்சியில் புதிய அத்தியாயத்தை எழுதும்.
- பிரதமர் மோடி
“ இன்றைக்கு நிறைவேற்றப்பட்டு வரும் திட்டங்கள், 30 ஆண்டுகளுக்கு முன் செய்து முடித்திருக்க வேண்டியவை. சரியான நோக்கமும், நேர்மையும் உள்ள அரசு இருந்தால் மட்டுமே வேகமான வளர்ச்சி சாத்தியமாகும்.
- பிரதமர் மோடி
“ இந்தியாவில் ஏன் ஒரே ஒரு தேர்தல் ஆணையர் மட்டும் இருக்கிறார். முன்பே கூறியது போல, சுதந்திர அமைப்புகளின் திட்டமிட்ட அழிவை நிறுத்தாவிட்டால் நமது ஜனநாயகம் சர்வாதிகாரத்தால் அபகரிக்கப்படும். வீழ்ச்சியடைந்த அரசியல் அமைப்புகளில் இந்திய தேர்தல் ஆணையம் கடைசியாக இருக்கும்.
- மல்லிகார்ஜூன கார்கே (காங்கிரஸ்)
“ பழங்குடியினர் தான் இந்தியாவில் உள்ள நிலத்தின் முதல் உரிமையாளர்கள். நீர், காடு மற்றும் நிலத்தில் உங்களுக்கு உரிமை உண்டு. வளர்ச்சி என்ற பேரில் பா.ஜ., அரசு உங்கள் தண்ணீரையும், காடுகளையும், நிலத்தையும் கோடீஸ்வரர்களிடம் ஒப்படைத்தது.
- காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி
“ காங்கிரசுக்கு இந்த தேர்தல்தான் கடைசி என்று கூறி, அண்ணாமலை போன்று பல பேர் எங்கள் கட்சிக்கு கெடு விதித்துள்ளனர். ஆனால் 139 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி உயிரோட்டமாக இருந்து வருகிறது.
- ப.சிதம்பரம்.
“ நாட்டின் வளர்ச்சிக்காக, அடுத்த 25 ஆண்டுகளுக்கான செயல்திட்டம் என்னிடம் உள்ளது. எதிர்க்கட்சிகளிடம் கோபம், அவமதிப்பு, அதிருப்தி ஆகியவை மட்டுமே உள்ளன. நாட்டுக்கு வழங்க அவர்களிடம் எந்த தீர்வும் இல்லை.
- பிரதமர் மோடி
“ எனக்கென சொந்த குடும்பம் இல்லாதது, எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு இப்போது பெரிய பிரச்சனையாக இருக்கிறது. மகாத்மா காந்தி, அம்பேத்கர், ராம் மனோகர் லோஹியா, ஜெயப்பிரகாஷ் நாராயண், கர்பூரி தாக்குர் போன்ற தலைவர்களும் தங்களின் குடும்பத்தை முன்னிறுத்தவில்லை. இந்த தலைவர்கள் இப்போது உயிரோடு இருந்தால், அவர்களையும் எதிர்க்கட்சித் தலைவர்கள் விமர்சிப்பார்கள்.
- பிரதமர் மோடி
“ காங்கிரசும் அதன் கூட்டணி கட்கிளும் சனாதன தர்மத்தையும் ராமரையும் அவமதிக்கும் வகையில் பலமுறை பேசியுள்ளனர். நாட்டை துண்டாட வேண்டும் என்ற ஒற்றை குறிக்கோளுடன் செயல்படும் குழுக்களுக்கு ஆதரவாக நிற்கிறார்கள். அவர்கள், தங்கள் வெற்றியை கொண்டாட பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிடுகின்றனர்.
- மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்
“ குடும்ப ஆட்சி நடத்துகிறவர்கள், தங்கள் கறுப்பு பணத்தை மறைக்க இந்தியாவுக்கு வெளியே வங்கிக் கணக்குகளை திறக்கிறார்கள். ஆனால், ஏழைகள் 'ஜன்தன்' கணக்குகளை துவங்கி அவர்களின் வளர்ச்சிக்கு நான் உதவுகிறேன். குடும்ப ஆட்சியாளர்கள், ஆடம்பர மாளிகையில் வாழ்கிறார்கள். நான், ஏழைகள் சொந்த வீடுகளில் உறங்குவதை உறுதி செய்கிறேன்.
- பிரதமர் நரேந்திர மோடி
“ அமலாக்கத்துறை, சி.பி.ஐ., வருமான வரித்துறை உள்ளிட்ட மத்திய அமைப்புகளை எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக மத்திய அரசு பயன்படுத்துகிறது. ஆனால், இதைக் கண்டு எதிர்க்கட்சி தலைவர்கள் அஞ்சவில்லை.
- காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே
“
- மோடி, முன்பு பிஹாருக்கு வந்திருந்தபோது, நான் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து 'காணாமல்' போயிருந்தேன். இப்போது மீண்டும் உங்களுடன் இருக்கிறேன். இனி தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருப்பேன். -பீஹார் முதல்வர் நிதீஷ்
“ தமிழகத்தில் 2,3 நாட்கள் பிரசாரம் செய்தால் வெற்றி பெற்றுவிடலாம் என்று மோடி நினைக்கிறார். நான் அவருக்கு சவால் விடுகிறேன். 40 நாட்கள் தமிழகத்தில் தங்கி பிரசாரம் செய்தாலும், இங்கு ஒரு தொகுதியில் கூட பா.ஜ., வெற்றி பெற முடியாது. தமிழக மக்கள் மிக தெளிவானவர்கள்.
- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
“ பழனிசாமியை, மோடி ஏன் பாராட்டவில்லை? எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சியை பிரதமர் மோடி பாராட்டியிருக்கிறார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நான்கரை ஆண்டுகள் ஆட்சி செய்த பழனிசாமி ஆட்சியை பாராட்டியிருந்தால் அது தான் சரியான அளவுகோல். அல்லது ஆட்சி சரியில்லை என கூறியிருக்கலாம். அப்படி பேசியிருந்தால் நடுநிலையாக இருந்திருக்கும்.