சீக்ரெட் கார்னர்
வேண்டாம் பிரசாரத்துக்கு
மலைக்கோட்டையூரில் இருந்து தலைமைச் செயலக நிர்வாகப் பொறுப்பு வரை வந்த அன்பிலானவர், சக தோழர் ஒருவரின் மகனுக்கு பிரசாரம் செய்ய வருவதாகச் சொன்னாராம். ஆனால், அதை தோழர் விரும்பவில்லையாம். அன்பிலானவருக்கு லேசுபாசாக தகவல் சொல்லி அனுப்ப, விருப்பமின்மையை புரிந்து கொண்டவர் அந்தப் பக்கம் போவதையே தவிர்த்து விட்டாராம்.
வேண்டி கொண்டதை சொல்லாதே
மதுரைக்கார கதிர் அரிவாள் கட்சிக்காரர்வெற்றிக்காக அங்கிருக்கும் மீனாட்சியிடம் வேண்டி கொண்டதாக கட்சி தோழர் ஒருவர் சொல்ல, மதுரைக்கார வேட்பாளருக்கு தகவல் சொன்னாராம். உடனே கதிர் அரிவாள்காரருக்கு கோபம் வந்து விட்டதாம். இப்படியெல்லாம் செஞ்சு, அதை வெளியில் சொன்னால், கட்சிக்கும் எனக்கும் தான் அவமானம் என்று கொந்தளித்தாராம்.
ஒத்துழைப்பின்மைக்கு காரணம்
பூட்டுக்கு பெயர் பெற்ற ஊரில் போட்டியில் இருக்கும் இலை கட்சியின் கூட்டணிக்காரருக்கு கடைசி வரை இலை கட்சியில் ஒத்துழைப்பில்லையாம். மாற்று மதத்துக்காரரோடு இன்று கூட்டணி என்பதற்காக சேர்ந்து சுற்றி விட்டு, தேர்தல் முடிந்ததும் தொழிலுக்காக சொந்த மதத்துக்காரர்களை நோக்கி திரும்பி வந்தால், அவர்கள் ஏற்றுக் கொள்ள மறுப்பரோ என்று நினைத்தே பலரும் ஒதுங்கினராம்.
வாசகர் கருத்து