துார்தர்ஷனில் 'டி-20' உலக கோப்பை

புதுடில்லி: 'டி-20' உலக கோப்பை, ஒலிம்பிக், விம்பிள்டன் போட்டிகள் துார்தர்ஷனில் ஒளிபரப்பப்பட உள்ளன.
துார்தர்ஷனின் 'டிடி' ஸ்போர்ட்ஸ் சேனலில், உலகளவில் நடக்கும் பல்வேறு விளையாட்டு தொடர்கள் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. இதன் படி அமெரிக்கா, வெஸ்ட் இண்டீசில் நடக்கும் 'டி-20' உலக கோப்பை, அடுத்து பாரிஸ் ஒலிம்பிக் (ஜூலை 26-ஆக. 11), பாராலிம்பிக் (ஆக. 28-செப். 8), விம்பிள்டன் டென்னிஸ் (ஜூலை 1-14) தொடர் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
தவிர இந்திய அணியின் ஜிம்பாப்வே பயணம் (ஜூலை 6-14), இலங்கைக்கு எதிரான தொடர் (ஜூலை 27-ஆக. 7), தற்போது நடக்கும் பிரெஞ்ச் ஓபன் பைனல், 'டிடி' ஸ்போர்ட்சில் ஒளிபரப்பு செய்யப்படும்.
'டி-20' உலக கோப்பைக்கான விளம்பர பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி டில்லியில் நடந்தது. பிரசார் பாரதி சேர்மன் நவ்னீத் குமார் சாகேல் கூறுகையில்,'' பல்வேறு விளையாட்டு, லீக் தொடர்களை 'டிடி' ஸ்போர்ட்சில் ஒளிபரப்பு செய்ய, பிரசார் பாரதி ஒப்பந்தம் செய்துள்ளது,'' என்றார்.