'சூப்பர் ஓவரில்' நமீபியா வெற்றி: ஓமன் அணிக்கு அதிர்ச்சி

பிரிட்ஜ்டவுன்: 'டி-20' உலக கோப்பையில் நமீபிய அணி 'சூப்பர் ஓவரில்' வெற்றி பெற்றது.
வெஸ்ட் இண்டீசின் பிரிட்ஜ்டவுனில் நேற்று நடந்த 'டி-20' உலக கோப்பை 'பி' பிரிவு லீக் போட்டியில் நமீபியா, ஓமன் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற நமீபியா 'பீல்டிங்' தேர்வு செய்தது.
ஓமன் அணிக்கு ஜீஷான் மக்சோத் (22), கலித் கைல் (34) ஆறுதல் தந்தனர். 19.4 ஓவரில் 109 ரன்னுக்கு சுருண்டது. நமீபியா சார்பில் ரூபன் 4, டேவிட் வைஸ் 3 விக்கெட் சாய்த்தனர்.

@subboxhd@போட்டி 'டை'@@subboxhd@@

சுலப இலக்கை விரட்டிய நமீபிய அணிக்கு நிக்கோலஸ் டேவின் (24) கைகொடுத்தார். கேப்டன் எராஸ்மஸ் (13), ஸ்மித் (8) நிலைக்கவில்லை. கடைசி ஓவரில் வெற்றிக்கு 5 ரன் தேவைப்பட்டன. மெஹ்ரான் கான் பந்துவீசினார். முதல் பந்தில் பிரைலிங்க்கை (45) அவுட்டாக்கிய இவர், 3வது பந்தில் ஜேன் கிரீனை (0) வெளியேற்றினார். இந்த ஓவரில் 4 ரன் மட்டும் கிடைத்தது.
@subboxhd@'சூப்பர்' வெற்றி@@subboxhd@@

நமீபிய அணி 20 ஓவரில் 109/6 ரன் எடுக்க போட்டி 'டை' ஆனது. இரு அணிகளும் ஒரே ஸ்கோர் எடுக்க, வெற்றியாளரை முடிவு செய்ய 'சூப்பர் ஓவர்' முறை பின்பற்றப்பட்டது. இதில் வைஸ் (13*), எராஸ்மஸ் (8*) கைகொடுக்க நமீபிய அணி ஒரு ஓவரில் 21/0 ரன் எடுத்தது. அடுத்து களமிறங்கிய ஓமன் அணி ஒரு ஓவரில் 10/1 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது.

@block@@subboxhd@முதல் வீரர்@@subboxhd@@

'டி-20' அரங்கில் முதல் ஓவரின் முதலிரண்டு பந்தில் இரண்டு விக்கெட் (ஓமனின் காஷ்யப், அகிப் இலியாஸ்) சாய்த்த முதல் பவுலரானார் நமீபியாவின் ரூபன் டிரம்பெல்மேன். @@block@@