எதிர்க்கட்சியினரை கண்காணிக்க கரூர் பா.ஜ., கூட்டத்தில் வலியுறுத்தல்
கரூர் : 'ஓட்டு எண்ணிக்கையின் போது எதிர்க்கட்சிகளின் தில்லுமுல்லுவை கண்காணிக்க வேண்டும்' என, பா.ஜ., கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
கரூர் மாவட்ட பா.ஜ., அலுவலகத்தில் ஓட்டு எண்ணிக்கை மையம் செல்லும் முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக மாநில துணை தலைவர் ராமலிங்கம் பேசியதாவது:
ஓட்டு எண்ணிக்கையின் போது எதிர்க்கட்சிகள் பல்வேறு முறைகேடுகளையும், தில்லுமுல்லுகளிலும் ஈடுபடுவர் என்பதால் கவனத்துடன் இருக்க வேண்டும். ஓட்டு எண்ணிக்கை சரியாக அதிகாரிகள் அறிவிக்கின்றனரா என்பதை கண்காணிக்க வேண்டும்..
இந்த தேர்தலில், இரட்டை இலக்க எண்ணிக்கையில் ஓட்டு சதவீதம் பெற்று, பா.ஜ., வெற்றி பெறும். இந்த தேர்தல் முடித்த பின் உள்ளாட்சி தேர்தல், சட்டசபை தேர்தலுக்கு தயாராக வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் கனகராஜ், திருச்சி புறநகர் மாவட்ட தலைவர் அஞ்சாநெஞ்சன், புதுக்கோட்டை மேற்கு மாவட்ட தலைவர் விஜயகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து