சீக்ரெட் கார்னர்
அரசியல் எனக்கு ஒத்து வராதுன்னு சொன்னேன்; களம் இறக்கி விட்டுட்டீங்க. போகும் இடங்களில் மக்கள் கடுமையான எதிர்ப்பு காண்பிக்கிறாங்கப்பான்னு மலைக்கோட்டைக்கு பக்கத்து தொகுதியில் போட்டியிடும் மந்திரியின் மகன், தன் அப்பாவிடம் புலம்பினாராம். அரசியல்ன்னா அப்படிதாம்பா இருக்கும். பொறுமையா நீந்திதான் கரை சேரணும்னு சொல்லி மகனை தேற்றினாராம் அப்பா.
டாலர் சிட்டியில் போட்டியிடும் தாமரை கட்சிப் பிரமுகருக்கு தொகுதி கிடைத்ததும் சந்தோஷம் அடைந்தாராம். ஆனால், களம் அவ்வளவு சாதகமாக இல்லை என்றதும், தலைமை மீது குற்றம் சொல்கிறாராம். கேட்டது தொழில் நகரத்தை; கொடுத்திருப்பது டாலர் சிட்டியை. தோத்துட்டா, ஊருக்குள்ள ஒரு மனுஷன்... முக்கியமாக கட்சிக்காரன் மதிக்க மாட்டான்னு சொல்லி புலம்பியபடியே ஓட்டு கேட்கிறாராம்.
எப்பவும் வெயில் கொளுத்தும் வட மாவட்ட கோட்டையூரில் கல்வியாளரை எதிர்த்து போட்டியிடும் அமைச்சர் மகன், இந்த முறையும் தன்னை காந்தி படம் அச்சிட்ட பேப்பர் காப்பாற்றும் என்று சொல்லி, அதையெல்லாம் கோட்டையூருக்கு பக்கத்திலேயே பதுக்கி வைத்து உள்ளாராம். தேர்தலுக்கு நான்கு நாட்களுக்கு முன் அதையெல்லாம் எடுத்து வந்து, ஓட்டு வேட்டையாட திட்டம் வைத்துள்ளராம்.
வாசகர் கருத்து