சீக்ரெட் கார்னர்
ஒதுங்கியவர்களுக்கு ஆப்பு வரும்
தேர்தலில் போட்டியிடாத தாமரை கட்சி தலைவர்கள் பலரும் தலைமை மீதான அதிருப்தியில், களத்தில் இருந்து விலகி இருக்கின்றனராம். அவர்கள் அனைவரையும் கட்சி மேலிடத்தில் இருந்து சமாதானப்படுத்தியுள்ளனர். ஆனாலும் அவர்கள் களத்தில் இறங்கி வேலை பார்க்காமல் ஒதுங்கியே உள்ளனராம். தேர்தல் முடிந்த கையோடு, நடவடிக்கை எடுக்க மேலிடத்தில் முடிவெடுக்கப்பட்டிருக்கிறதாம்.
தெலுங்கில் பேச வைத்து
தென்னகத்து மான்செஸ்டர் ஊரில் போட்டியிடும் மலை தலைவருக்கு தெலுங்கு பேசும் மக்கள் மத்தியில் செல்வாக்கு குறைவாக இருப்பதாக, தாமரை கட்சியின் அதிரடியான ரெட்டி தலைவரிடம், மலை தலைவர் தகவல் பகிர்ந்தாராம். பக்கத்து மாநிலத்தில் இருந்து பாபு தலைவர் மகனை, மலை தலைவர் போட்டியிடும் ஊருக்கு அழைத்து வந்து தெலுங்கிலேயே பேச வைத்து மலைக்கு செல்வாக்குக் கூட்டினாராம்.
நிதி கொடுக்க மாட்டேன்
மலை தலைவர் தாமரை கசியில் இணைந்தது போல சிவில் சர்வீஸ் பதவியை விட்டு விட்டு கை கட்சியில் இணைந்த முருகனானவருக்கு, கட்சி தலைமையிடம் இருந்து நிதி உதவி அளித்து, வாக்காளர்களுக்கு தாராளமாக செலவு செய்ய சொன்னார்களாம். நான் தாமரை கட்சித் தலைவர் போலத்தான், நிதி கொடுத்து ஓட்டு வாங்க மாட்டேன் என்று வம்பு செய்ய, சொந்த கட்சியினரே வெறுத்துப் போயுள்ளனராம்.
வாசகர் கருத்து