சீக்ரெட் கார்னர்
ரகசிய ஊருக்கு சென்ற நவரச நாயகன், உடையும் உருண்டைக்கு ஓட்டுக் கேட்டு பேசிய பேச்சு, அருகில் இருந்த உறுமல் தலைவருக்கு புரியவில்லையாம். என்ன பேசுனீங்க; என்ன பேசுனீங்கன்னு கேட்க, நாயகனுக்கு கோபம் வந்து விட்டதாம். ஒரு முறை முறைக்க, தலைவருக்கு அச்சமாகி விட்டதாம். அதன் பின் பேசிய பேச்சு புரியாவிட்டாலும்,
அருகில் இருந்து கைதட்டினாராம்.
சூரிய கட்சியின் இளையவருக்கு பிரசாரத்தில் பேச, மாஸ்கோ தலைவர் பெயர் கொண்ட பத்திரிகையாளர் ஸ்கிரிப்ட் எழுதி கொடுத்தாராம். இதை மாத்துங்க... அதை மாத்துங்க என இளையவரிடம் இருந்து உத்தரவு வந்ததோடு, ஸ்க்ரிப்டில் ஒரு பெப் இல்லை என்று சொல்ல, இது தனக்கு ஒத்து வராது என்று சொல்லி, அப்பணியில் இருந்து விலகிக் கொண்டாராம் மாஸ்கோ மனிதர்.
கோட்டையூரில் இருக்கும் முருகன் தலைவர், தன் மகனை சூரிய கட்சி சார்பில் வேட்பாளர் ஆக்கினார். போகும் இடங்களில் கடும் எதிர்ப்பு இருக்க, கட்சியின் தலைமையிடம் பேசும் போது வருத்தமாகச் சொன்னாராம். அப்படியென்றால், ஆட்சி நிர்வாகம் சரியில்லைன்னு சொல்ல வர்றீங்களான்னு கேள்வி கேட்டதும் நடுங்கிட்டாராம் தலைவர். மன்னிச்சுடுங்கன்னு சொல்லி போனை வைத்துவிட்டாராம்.
வாசகர் கருத்து