பா.ஜ., இரட்டை இலக்க எண்ணிக்கையில் வெற்றி பெறும் : எல்.முருகன் பேட்டி
தூத்துக்குடி: தமிழகத்தில் பா.ஜ., யாரும் எதிர்பாராத வகையில் இரட்டை இலக்க எண்ணிக்கையில் வெற்றி பெறும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறினார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் எல்.முருகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பிரதமராக நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பதவியேற்பார். தமிழகத்தில் பா.ஜ. யாரும் எதிர்பாராத வகையில் இரட்டை இலக்க எண்ணிக்கையில் வெற்றி பெறும். பிரதமர் மோடிக்கு ஆதரவு அலை வீசுகிறது. மேட்டுப்பாளையத்தில் காங்கிரஸ் கவுன்சிலரால் தாக்கப்பட்ட நபர் மருத்துவமனையில் இருக்கிறார்.
அந்த கவுன்சிலர் இதுவரை கைது செய்யப்படவில்லை. இதற்கு மாறாக அந்த இளைஞர் மற்றும் அவரது தாய் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. போலீஸ் மற்றும் நடத்துனர் இடையே கட்டப்பஞ்சாயத்து செய்யப்படுகிறதா?.
இமயமலை
அரசு நிர்வாகம் இல்லையா? இது மிகவும் கேவலமானது. கடந்த தேர்தலின் போது பாரத பிரதமர் இமயமலை சென்று தியானம் செய்தார். தற்போது தமிழகத்தில் விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி தியானம் செய்து கொண்டிருக்கிறார்.
மூன்றாவது இடம்
2014ல் நாம் பொருளாதாரத்தில் பத்தாவது இடத்தில் இருந்தோம். இப்பொழுது 10 ஆண்டுகளில் பொருளாதாரம் அதிக அளவு முன்னேறியுள்ளது. இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி இந்தியா உலக அளவில் பொருளாதாரத்தில் முன்னேறியுள்ளது. தற்போது ஐந்தாவது இடத்தில் உள்ளோம். 2027ம் ஆண்டுக்குள் மூன்றாவது இடத்தை அடைவோம் என பிரதமர் மோடி மக்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து