சீக்ரெட் கார்னர்
பானை கட்சியில் அதிக எதிர்பார்ப்புடன் இணைந்த தொழில் அதிபருக்கு கட்சியில் பதவி கொடுத்தனர். ஆனால், தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்கவில்லை. கூட்டணியில் தனக்கு ஒரு சீட் வாங்கிக் கொடுக்கவில்லை என்ற அதிருப்தியில் இருக்கும் அவர், தேர்தல் முடிந்ததும் மாற்றி முடிவெடுக்க யோசிக்கிறாராம்.
சூரிய கட்சியினர் வாக்காளர்களுக்கு கொடுக்கும் பரிசு பணத்தை ஆம்புலன்சில் வைத்து எடுத்துச் செல்வதாக, இலை கட்சித் தலைவருக்கு தகவல் போய் இருக்கிறது. இது தொடர்பாக செய்தி வெளியிட்டு பரபரப்பாக்கலாம் என கட்சியினர் யோசனை சொல்ல, தலைவர் மறுத்து, 'இதைத்தானே கடந்த தேர்தலுக்கு நாம செய்தோம்' என்று சொன்னாராம்.
வாரிசு அரசியலை எதிர்த்து கட்சித் துவங்கிய துண்டு தலைவர், தன் மகனை கட்சிப் பொறுப்பாளர் ஆக்கியதோடு, தேர்தலில் போட்டியிட சீட்டும் கொடுத்ததில் கட்சிக்குள் புகைச்சலாம். தலைவர் சமாதானப்படுத்தியும் ஒரு சிலர் தொடர்ந்து இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க, அவர்களை கட்சியை விட்டு அப்புறப்படுத்த தலைவர் திட்டம் போடுகிறாராம்.
வாசகர் கருத்து