சீக்ரெட் கார்னர்
தமிழகத்தில் தேர்தல் நடத்தும் பொறுப்பில் இருக்கும் அதிகாரிக்கு இலை கட்சி நபர் ஒருவர் அடிக்கடி போன் செய்கிறாராம். இங்கே பறக்கும் படை சரியில்லை. அங்கே பறக்கும் படை சரியில்லை என்று தொடர்ந்து சொல்கிறாராம். நடவடிக்கை எடுத்தும் சமாதானமடையாததால், குறிப்பிட்ட நபரிடம் இருந்து போன் வந்தாலே, அதிகாரி பதற்றமடைகிறாராம்.வேலை பாதிக்க கூடாது
இலை கட்சியின் பிரதான தலைவர் பிரசாரத்துக்குப் போகும் இடங்களுக்கு, பக்கத்து மாவட்டங்களில் இருந்து முக்கியப் பிரமுகர்கள் வந்து கொண்டிருந்தனராம். அதனால், பிரசாரம் பாதிக்கப்படுவதாக தெரிந்ததும், அவர்களை தன் பிரசார பொதுகூட்டங்களுக்கு வர வேண்டாம் என உத்தரவிட, அதன்படியே கட்சி நிர்வாகிகள் வருவதில்லையாம்.
வரவேற்புக்கு பலன் உண்டா?
டில்லியில் இருந்து தாமரை கட்சி பிரசாரத்துக்கு டில்லி தலைவர்கள் தமிழகம் வரப் போகின்றனர். அவர்களை வரவேற்று உபசரிக்கும் வேலை தொழில் அதிபர் ஒருவரிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அடுத்தும் தாமரை ஆட்சியே தொடரும் என்பதால், தன் மெடிக்கல் காலேஜ் ஆசை நிறைவேறும் என்ற நினைப்பில் தாமரை கட்சியினரோடு சுற்றி வருகிறாராம்.
வாசகர் கருத்து