சீக்ரெட் கார்னர்
தாமரை கட்சியின் தமிழக மூத்த தலைவரை தேர்தலுக்குப் பின் டில்லிக்கு கொண்டு போக, தலைமை முடிவெடுத்துடுச்சாம். அதனால், அவர் இடத்தைப் பிடிக்க தமிழகத் தலைவர்கள் பலரும் டில்லிக்கு படையெடுத்தனர். வேண்டப்பட்ட தலைவர்களை சந்தித்து பரிந்துரைக்கு கேட்டனராம். ஏற்கனவே அந்த இடத்துக்கு ஒருவர் தேர்வாகிட்டார்னு பெண் அமைச்சரை பற்றி சொன்னாங்களாம்.
தேர்தல் களத்தில் இலை கட்சியின் பிரசாரம் தான் டாப் என, உளவுத்துறை அறிக்கை தகவல் சொன்னதாம். இதை அறிந்ததும், சூரிய கட்சி தலைவர் கட்சியின் மூத்த தலைவர்களிடம் பேசி, மக்களை கவரும்படியே பேசுங்கன்னு உத்தரவிட்டிருக்காராம். இதனால், மக்களை கவரும்படி எப்படி பேசுவதுன்னு தெரிஞ்சவங்க கிட்ட யோசனை கேட்குறாங்களாம் சூரிய கட்சி தலைவர்கள்.
மக்களோட மக்களா இருக்கிறேன்னு காட்டுறதுக்காக சூரிய கட்சி தலைவர் நடை பயணம் செஞ்சு மக்கள்கிட்ட ஓட்டு கேட்டார். போகும் இடங்களில் மக்களை சந்திச்சு கருத்து கேட்க, மகளிர் உரிமைத் தொகை கிடைக்காத பெண்கள் வெளிப்படையாவே தலைவர்கிட்ட கேட்குறாங்களாம். இதுனால, மக்களை நேரடியா சந்திச்சு கருத்து கேட்டு பிரசாரம் செய்யறதை நிறுத்திட்டாராம் தலைவர்.
வாசகர் கருத்து