சீக்ரெட் கார்னர்
பிரசாரத்தில் ஓடோடி கொண்டிருந்த இலை கட்சி தலைவர் இரு நாட்களுக்கு முன், ஓய்வில் இருந்தாராம். அப்போது, தேர்தல் செலவு கணக்கு- குறித்து கட்சியினரிடம் கேட்டாராம். ஆளாளுக்கு ஒவ்வொரு கணக்கை கொடுக்க தலைவருக்கு கிறுகிறுத்து விட்டதாம். செலவழிக்கிறது முக்கியமில்லைப்பா; நாளைக்கு கடிவாள
கமிஷனுக்கு கணக்கு காட்ட முடியாதேன்னு சொல்லி எரிச்சல்பட்டாராம்.
ரகசிய ஊரில் போட்டியிடும் வளவனாருக்கு களத்தில், இலை கட்சியால் கடும் போட்டி இருப்பதால் சூரிய கட்சி தலைவருக்கு போன் போட்டாராம். சொந்த கட்சியினரை கொஞ்சம் வேகமாக தேர்தல் வேலை பார்க்கச் சொல்லுங்கன்னு சொன்னாராம். இதையடுத்து, சூரிய கட்சியினர் பானையும், கையுமாக தொகுதிக்குள் பம்பரமாக சுழல துவங்கி உள்ளனராம்.
தென் மாவட்டத்தில் இருக்கும் காசியூரில் தமிழகம் கட்சியின் தலைவர் சுயேச்சை சின்னத்தில் தான் போட்டியிடுவேன் என முரண்டு பிடித்தாராம். பம்பரம், கரும்பு விவசாயியெல்லாம் பட்டபாட்டை சுட்டிக்காட்டிய இலை கட்சி தலைவர், 'ரிஸ்க் எடுக்காதீங்க; இலையிலேயே போட்டியிடுங்க'ன்னு சொன்னாராம். அதையடுத்தே இலையை நாடினாராம் சாமி தமிழகம் தலைவர்.
வாசகர் கருத்து